சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு


சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
x
தினத்தந்தி 4 April 2022 7:59 PM IST (Updated: 4 April 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிக்கல்:
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
சிக்கல் சிங்காரவேலர் 
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நேற்று பங்குனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிங்காரவேலவருக்கு  பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிங்காரவேலர் வள்ளி,தெய்வானையுடன் அருள்பாலித்தார். இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வேதாரண்யம் 
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகரசுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
1 More update

Next Story