ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது


ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 8:23 PM IST (Updated: 4 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பஜாரில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் பஜாரில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை நடத்தினார். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் வேல்முருகனை கைது செய்தனர்.
1 More update

Next Story