பஞ்சநதிக்குளம் நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் பணியிடை நீக்கம்
வெளிமாவட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்வதாக புகார் பஞ்சநதிக்குளம் நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் பணியிடை நீக்கம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்ததாக விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இலக்குவன், வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், மண்டல துணை மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் அலுவலர் சுரேந்தர், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் ஆகியோர் பஞ்சநதிக்குளம் மேற்கு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 240 நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்து தெரியவந்தது. இதில் தொடர்புடைய பஞ்சநதிக்குளம் மேற்கு நெல் கொள்முதல் நிைலய உதவியாளர் பக்கிரிசாமியை பணியிடை நீக்கம் செய்து மண்டல துணை மேலாளர் ரங்கநாதன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கொள்முதல் நிலையத்தில் இருந்த 240 நெல்மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story