திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் அலைமோதிய வாசகர்கள் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் வாசகர்கள் கூட்டம் அலைமோதியது.
புத்தக கண்காட்சி
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வாலிபர்கள் என பலதரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த 1-ந் தேதி அன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி வருகின்ற 11-ந் தேதி வரை நடைபெற்றும்.
இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டும் இருக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
அலைமோதிய வாசகர்கள்
இந்த புத்தக கண்காட்சியில் தினந்தோறும் புகழ்பெற்ற பேச்சாளர்களை கொண்டு கருத்துரைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் 3-ம் நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், புத்தக வாசகர்கள் குவிந்தனர்.
இதில் கலந்துக்கொண்டவர்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இந்த புத்தக கண்காட்சியை மெறுகேற்றும் வகையில் மாணவர்கள் மற்றும் நாட்டிய கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story