திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் மூலவரை தரிசித்தனர்.
திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடிகிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சகணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை மற்றும் பரணி தினம் என்பதால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.
இதனால், பொதுவழியில் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
Related Tags :
Next Story