ஓட்டல், டீக்கடை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓட்டல், டீக்கடை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு ஓட்டல், டீ மற்றும் ஸ்வீட்ஸ் கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணி, துணை தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டல், டீ மற்றும் ஸ்வீட்ஸ் கடை தொழிலாளர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓட்டல், டீக்கடை தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story