விழுப்புரத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி
விழுப்புரத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி பல்துறை பணிவிளக்க கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பல்துறை விளக்க கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, விழுப்புரம் நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகரமன்ற கவுன்சிலர்கள் ஜெயப்பிரியா சக்திவேல், வித்தியசங்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story