பெற்றோருடன் பள்ளி மாணவன் சாலை மறியல்


பெற்றோருடன் பள்ளி மாணவன் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 April 2022 10:20 PM IST (Updated: 4 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பெற்றோருடன் பள்ளி மாணவன் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டான்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் புறவழிச்சாலை அமைப்பதற்கு முன்பாக அதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை அரசு ஊழியர் நகர் பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று சென்றன. புறவழிச்சாலை அமைந்த பிறகு கடந்த 15 ஆண்டுகளாக அரசு ஊழியர் பஸ் நிறுத்தத்தில் எந்தவொரு பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், விழுப்புரம் நகரில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர் லட்சுமிநாராயணன் என்பவர் நேற்று காலை 9 மணியளவில் ஜானகிபுரம் புறவழிச்சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் 9.15 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story