சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி குந்தவேல் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, குளத்தூர் ஆறுமுகப்பெருமான், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com