இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இளையான்குடி,
பெட்ரோல்- டீசல், கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து இளையான்குடி கண்மாய் கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளையான்குடி தாலுகா கமிட்டி செயலாளர் ராஜூ தலைமையில் இளை யான்குடி தாலுகா கமிட்டி நிர்வாகிகள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், மருந்து பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றின் விலையேற்றத்தின் காரணமாக தினந்தோறும் மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தை கண்டித்தும் விலை ஏற்றத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story