இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொம்மிடி:
தர்மபுரி, அரூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் இந்திரா, பூங்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, அதியமான்கோட்டைி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ராஜபேட்டை, சோலைகொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி, தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரெயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, பாளையம்புதூர், தடங்கம், ஸ்பின்னிங் மில், தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story