பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 11:05 PM IST (Updated: 4 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, எல்லப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பென்னாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் எழிலரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டர், மொபட் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோல் அரியகுளத்தில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிபட்டி பஸ்நிலையத்தில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட குழுஉறுப்பினர் வஞ்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
அரூரில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுணன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். காரிமங்கலத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸாமேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டகுழு உறுப்பினர் மாதையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
பாலக்கோடு-மொரப்பூர்
பாலக்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ராஜா, காரல்மார்க்ஸ், சந்திரசேகரன், முருகன், பாண்டியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மொரப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், அர்ஜூனன், மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட குழு உறுப்பினர் ராமன் வரவேற்று பேசினார். இதில் விவசாய சங்க பிரிவு நிர்வாகி ஜோதி, வட்ட குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், பொன்ராஜ், நிர்வாகிகள் ரவி, தாமரைச்செல்வன் உள்ளிட்ட கட்சி தோழர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
கோஷங்கள் 
இந்த ஆர்ப்பாட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக அதிகரிக்க செய்யும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story