பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. எனவே இவற்றின் விலையை மத்திய அரசு உடனே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அஞ்செட்டி, ஊத்தங்கரை
இதேபோன்று அஞ்செட்டி பஸ்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயரஜ், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story