புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

x
தினத்தந்தி 4 April 2022 11:06 PM IST (Updated: 4 April 2022 11:06 PM IST)
ஊத்தங்கரை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் அனுமன்தீர்த்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கோவிந்தராஜ் (42) என்பவரை கைது செய்தனர். அதே போல சிங்காரப்பேட்டை போலீசார் காந்தி நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நடுப்பட்டி மாரியப்பன் (55), பாவக்கல் பெருமாள் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





