சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்
தமிழக அரசு சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊத்துக்குளி
தமிழக அரசு சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
ஊத்துக்குளி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணி கொடி ஏற்றி வைத்தார். தியாகிகள் ஸ்தூபி மற்றும் சமீபத்தில் மறைந்த தோழர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மறைந்த தலைவர்களுக்கும், தலைநகர் டெல்லியில் போராட்டக் காலத்தில் உயிர்நீத்த விவசாயிகள், கொடிய கொரோனா பெரும் தொற்றுக்கு பலியான பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பாலசுப்பிரமணி உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தாலுகா துணைச்செயலாளர் கேசவன்.ஈஸ்வரன். பொருளாளர் ஈஸ்வரன் ஆகையால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு, விலை உயர்வு வேலையின்மையின் காரணமாக பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்கள் மீது மேலும் சுமை ஏற்றும் விதமாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரியை 100 சதத்திற்கு மேல் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த வரி உயர்வு அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வூதியம்
சிறு குறு விவசாயிகள் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க தனிச் சட்டம் நிறைவேற்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ் நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் 1 கோடியே 15 லட்சம்பேர்உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித சமூக பாதுகாப்பும் கிடையாது. எனவே விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கடந்த 7ஆண்டுகளில் வேலையுறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வெகுவாக குறைப்பது திட்டத்தை முடக்கும் நடவடிக்கையாகும்
ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு 200 நாள் வேலை வழங்கி நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story