கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 57 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்துள்ள கீழப்பூங்குடியை சேர்ந்த வசந்தகுமாரி (57). தற்போது வீடு கட்டி வரும் இடத்தில் சிலர் பாதையை அடைக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் கூறியும்எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை அங்கிருந்த போலீசார் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story