திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் புதிய பஸ் நிலையம்
திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில், ஆரணி சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.
இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் ஜிஜாயாய், பேரூராட்சி தலைவர் மாலா, துணைத் தலைவர் கவுரி தாமோதரன் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், ஒன்றியக்குழு தலைவர் அசோக், உதவி செயற்பொறியாளர் அம்சா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story