வீரஅழகரை சுமந்து சென்ற 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரை வாகனம் புதுப்பொலிவு பெற்றது

வீரஅழகரை சுமந்து சென்ற 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரை வாகனம் புதுப்பொலிவு பெற்றது
x
தினத்தந்தி 5 April 2022 12:04 AM IST (Updated: 5 April 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் சித்திரை மற்றும் ஆடி திருவிழாவின் போது வீர அழகரை சுமந்து சென்ற 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரை வாகனம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மானாமதுரை, 
மானாமதுரையில் சித்திரை மற்றும் ஆடி திருவிழாவின் போது வீர அழகரை சுமந்து சென்ற 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரை வாகனம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. 
சித்திரை திருவிழா
மானாமதுரையில் உள்ள வீர அழகர் கோவிலில் ஆண்டுந் தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களின்போது வீர அழகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குவார். 
இந்த குதிரை வாகனத்தை மானாமதுரையில் கடந்த 120 ஆண்டுங்களுக்கு முன்பு பக்தர் ஒருவரால் கோவிலுக்கு உபயமாக கொடுக்கப்பட்டது. 
ஒப்படைப்பு
இந்தநிலையில் தற்போது அந்த குதிரை வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அந்த பக்தரின் குடும்பத்தினர் குதிரை வாகனத்தை சீரமைத்து அதில் சேதமடைந்து இருந்த பகுதிகளை மாற்றிவிட்டு புதுப் பொலிவோடு குதிரை வாகனத்தை மாற்றி அழகர் கோவிலில் ஒப்படைத்தனர்.
 இதனைத்தொடர்ந்து கோவிலில் குதிரை வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

Next Story