புதுச்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


புதுச்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 12:08 AM IST (Updated: 5 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஒன்றிய பார்வையாளர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாநில தலைவர் பாலகணபதி, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வாணக்காரன்புதூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பா.ஜ.க.வினர் கோஷமிட்டனர். மேலும் தனிநபருக்கு ஆதரவாக வருவாய்த்துறையினர் செயல்படுவதாக கூறினர். முன்னதாக புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை பா.ஜ.க.வினர் மற்றும் வாணக்காரன்புதூர் பகுதி பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கந்தசாமி, நாகராஜன், மாவட்ட செயலாளர்கள் ஹரிஹரன், லோகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story