கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 12:21 AM IST (Updated: 5 April 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி:
கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்டோவை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.
இதேபோல் ஆவுடையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினவேல், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கந்தர்வகோட்டை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு மத்திய அரசை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒரு காரை மாட்டு வண்டி மூலம் இழுத்துச் சென்றார்கள். மேலும் சிலிண்டருக்கு பாடைகட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து இறுதிச்சடங்கு செய்தனர்.

Next Story