வழக்குகளை தீர்க்க சமரச தீர்வு நாள் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்ட சமரச தீர்வு மையம் மூலம் 9-ந் தேதி சமரச தீர்வு நாள் நடைபெறும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சமரச தீர்வு மையம் மூலம் 9-ந் தேதி சமரச தீர்வு நாள் நடைபெறும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா கூறினார்.
சமரச தீர்வு மையம்
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் சார்பில் வருகிற 9-ந் தேதி சமரச தீர்வு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமரச விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அவருடன் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேசுவரி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் உடன் சென்றனர்.
விழிப்புணர்வு
இதேபோல சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சிறப்பு நீதிபதி உதய வேலவன், சார்பு நீதிபதி சுந்தர்ராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் விழிப்புணர்வு நோட்டீசுகளை மாணவிகளுக்கு கொடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா கூறியதாவது:-
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தின் மூலமாக வருகிற 9-ந் தேதி சமரச தீர்வு நாள் நடைபெறுகிறது. அன்று தனிநபர் தகராறு, பணம் வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, வாடகை தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம் மற்றும் தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உரிமை யியல் மற்றும் இதர வழக்கு குறித்து சமரசம் செய்து கொள்ளலாம்.
சமரச முடிவு
சமரச தீர்வு மையத்தில் நேரடியா கவோ அல்லது வக்கீல் மூலமோ ஆஜராகும்போது உங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். மேலும் சமரச மையத்தில் எதிர்தரப்பு உடன் நேரடியாக நீங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம். சமரச மையத்தில் நடைபெறும் வழக்குகளில் சமரச முடிவு ஏற்படும்போது எந்தவித மேல்முறையீடு இல்லாமலும் விரைவாகவும் இறுதியான சுமுக தீர்வு கட்டணமின்றி காணமுடியும்.
சமரசத்தின் மூலம் உங்கள் வழக்கு தீர்க்கப் பட்டால் நீதிமன்ற கட்டணத்தை உங்களிடமே திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். சமரசம் ஏற்படவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாதத்தை நீதிமன்றத்தில் தொடரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story