முதியவருக்கு ஆயுள் தண்டனை


முதியவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 5 April 2022 12:33 AM IST (Updated: 5 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர். 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒத்தையால் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 64). கூலி தொழிலாளி.  கடந்த 5-4-2019-ந் தேதியன்று 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை  நீதிபதி தனசேகரன் விசாரித்து, சுந்தரராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம்  நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.


Next Story