அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2022 12:39 AM IST (Updated: 5 April 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். வத்திராயிருப்பு தாலுகாவில் கருவூலம் அமைக்கவேண்டும். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க வேண்டும். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். வத்திராயிருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரிசாமி, லிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன், துணைச் செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story