மணல் கடத்தல்; 2 பேர் கைது

ராமநத்தம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல்; 2 பேர் கைது
Published on

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள வாகையூரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல்(வயது 45) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆ.பாளையம் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com