மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், 4 வழிச்சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய 2-ம் பகுதி குழு செயலாளர் ஜீவா தலைமையில் தெற்கு வாசல் மார்க்கெட் அருகில் நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு விஜயராஜன் பேசினார். மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகலா, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தெய்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்தை டிரை சைக்கிளில் ஏற்றி வைத்து மாலை அணிவித்தும், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story