மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சேலம்:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். துணை மேயர் சாரதா தேவி, தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் கிரிஜா குமரேசன், சுப்பிரமணி, ராஜகணபதி, பழனி, வரதராஜ், சிவக்குமார், சாந்தமூர்த்தி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னங்குறிச்சி
சேலம் கன்னங்குறிச்சியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அருளானந்தம், அரவிந்த், தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் பழனி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சக்தி, காங்கிரஸ் கட்சியின் கன்னங்குறிச்சி பேரூர் தலைவர் மாணிக்கம், மகிளா காங்கிரஸ் நிர்வாகி மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story