கார் பல்டி அடித்து தந்தை-மகன் பலி


கார் பல்டி அடித்து தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 5 April 2022 2:16 AM IST (Updated: 5 April 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே கார் பல்டி அடித்து தந்தை-மகன் பலியானார்கள்.

பெங்களூரு:

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா அருகே கானாபுரா கிராமத்தில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள் சிக்கி தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்ததும் ஆலந்தா போலீசார் விரைந்து வந்து தந்தை, மகனின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மராட்டிய மாநிலம் அக்கலிகோட் பகுதியை சேர்ந்த பாபு கலகவாடி (வயது 55), இவரது மகன் சுவாமி கலகவாடி (30) என்று தெரிந்தது.

  இவர்கள் 2 பேரும் ஆலந்தாவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மராட்டிய மாநிலத்திற்கு காரில் திரும்பிய போது கார் பல்டி அடித்து கவிழ்ந்ததில் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story