கர்நாடகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 38 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூரு நகரில் 36 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர் என 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 45 ஆயிரத்து 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் மேலும் ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 55 பேர் இறந்து உள்ளனர்.

நேற்று 52 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 9 லட்சத்து 4 ஆயிரத்து 101 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,500 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com