நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 April 2022 2:26 AM IST (Updated: 5 April 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 63), விவசாயி. 

இவர் தனது மனைவி மரியபுஷ்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அப்போது செல்லப்பா திடீரென தனது பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து திறந்து தனது உடலில் ஊற்றினார். இதை பார்த்த போலீசார் பாய்ந்து சென்று பாட்டிலை அவரிடம் இருந்து வாங்கினார்கள். அதற்குள் அவருடைய உடலில் மண்எண்ணெய் கொட்டி விட்டது. இதனால் தண்ணீரை ஊற்றி அவரை சுத்தம் செய்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனக்கு சொந்தமான நிலத்தை மற்றொருவர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்து விட்டார். இது சம்பந்தமாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாக, கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story