4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 5 April 2022 2:49 AM IST (Updated: 5 April 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை,:
நெல்லை ராஜவல்லிபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற ராஜா (வயது 29). இவர் கஞ்சா விற்ற வழக்கில் தாழையூத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதேபோல் பாளையங்கோட்டை அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் என்ற ஜில்லா சுரேஷ் (29), இசக்கிமுத்து (27), பாலாஜி (25). இவர்கள் 3 பேரும் அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் முன்னீர்பள்ளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இசக்கிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் விஷ்ணு ஏற்று, இசக்கிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story