தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரவுடி பலி

தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரவுடி உயிரிழந்தார்.
தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரவுடி பலி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாறு. இவரது மகன் சின்னதம்பி என்ற விஜய் (வயது 22). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற வாகனத்தை அவர் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் ரவுடி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com