பணம் வைத்திருந்த பையை தவறவிட்ட ஓய்வு பெற்ற போலீஸ்காரர்


பணம் வைத்திருந்த பையை தவறவிட்ட ஓய்வு பெற்ற போலீஸ்காரர்
x
தினத்தந்தி 5 April 2022 2:59 AM IST (Updated: 5 April 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்திருந்த பையை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தவறவிட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (80). போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று மாலை தா.பழூரில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி ரூ.17 ஆயிரத்து 500 எடுத்துள்ளார். பின்னர் தா.பழூர் கடைவீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். இதையடுத்து மீதமிருந்த ரூ.15 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்து எடுத்துக்கொண்டு, தனது பேரனுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது கைப்பையை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர், மீண்டும் தா.பழூர் கடை வீதிக்கு வந்து பல்வேறு இடங்களில் பணத்தை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவரது கைப்பை கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் தனபால் கொடுத்த புகாரில், தனது கைப்பையில் வைத்திருந்த ரொக்கப் பணத்தையும், அதோடு வைக்கப்பட்டிருந்த ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் தா.பழூர் கடைவீதியில் தவறவிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story