ரேஷன் கோதுமை கடத்திய 2 பேர் கைது


ரேஷன் கோதுமை கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 3:59 AM IST (Updated: 5 April 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் ரேஷன் கோதுமை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி:
நெல்லை மாவட்ட  உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - கல்லூத்து ரோட்டில் துத்திகுளம் விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு மினி லாரியை மறித்து சோதனை செய்ததில், 55 மூட்டைகளில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் கோதுமை இருந்ததும், அவற்றை கடத்தி சென்றதும் தெரியவந்தது. 

இதுதொடர்பாக லாரியில் இருந்த ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (26), சுந்தர் (28) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் கோதுமையை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

Next Story