காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாா்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குழித்துறை:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமை தாங்கினார். குழித்துறையில் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.
இதி்ல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முடித்து வைத்து பேசினார்.
Related Tags :
Next Story