குலசேகரன்பட்டினத்தில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது


குலசேகரன்பட்டினத்தில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 5:33 PM IST (Updated: 5 April 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தென்காசி மாவட்டம் ராவணசமுத்திரம் சின்ன தெருவை சேர்ந்த முகைதீன் ரபீக் மகன் முகைதீன் அப்பா (வயது 38) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்துள்ளார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த குலசேகரன்பட்டினம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோன்று குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம்-உடன்குடி ரோடு சமத்துவபுரம் அருகே ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் (45) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Next Story