உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட்ட மக்களுக்கு, தி.மு.க. சொத்து வரியை கடுமையாக உயர்த்தி வேட்டு வைத்து விட்டது
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட்ட மக்களுக்கு, தி.மு.க. சொத்து வரியை கடுமையாக உயர்த்தி வேட்டு வைத்து விட்டு மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருச்சி, ஏப்.6-

திருச்சியில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியதை கண்டித்தும், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியதை கண்டித்தும், கடந்த 11 மாத காலமாக தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையை எதிர்த்தும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பாக நேற்று திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன் (மாநகர்), ப.குமார் (புறநகர் தெற்கு), பரஞ்ஜோதி (புறநகர் வடக்கு) மற்றும் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
வரியை உயர்த்தாத அ.தி.மு.க. அரசு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரசால் மக்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து வேதனையில் அல்லல்பட்டு இருக்கும் நிலையில் வீட்டு வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி இந்த விடியா அரசு மக்கள் மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு கடுமையாக வரியை உயர்த்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. வீட்டு மக்களை பற்றித்தான் அவருக்கு கவலை. நாட்டின் நிலவரம் தெரியாமல் இருக்கும் ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, பிரச்சினைகளை உணர்ந்து செயல்பட்டனர். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வரியை உயர்த்தாத ஒரு அரசாங்கமாக அ.தி.மு.க. அரசு விளங்கியது.
மத்திய அரசு மீது வீண்பழி
இப்போது தி.மு.க. அரசு சொத்துவரியை உயர்த்திவிட்டு, மத்திய அரசு வரியை உயர்த்த கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசு வரியை உயர்த்த சொல்லவே இல்லை. மாநிலங்களில் குறைந்தபட்ச அளவில் வரி விதிப்பினை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மத்திய அரசு மீது பழியை போட்டுவிட்டு சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்துவதா?
தி.மு.க.வில் இருப்பவர்கள் ஏதோ மும்பை, கொல்கத்தா, நாசிக்கில் உள்ள வரி உயர்வை ஒப்பிட்டு அதை விட தமிழகத்தில் குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் வரியை உயர்த்தாத டெல்லியை ஒப்பிட்டு அவர்கள் பேசவில்லை. அங்கு சீராக வரி செலுத்துபவர்களுக்கு 15 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 30 சதவீத வரிவிலக்கும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரி விலக்கும் அளிக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
நிர்வாகத்திறமை இல்லாத, கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது. கடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை கொடுத்தார்கள்.
இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்ட ஒரே கட்சி தி.மு.க. மட்டும்தான். இந்த தேர்தல் அறிக்கையில் 487 ஆவது அறிவிப்பாக கொரோனாவில் இருந்து தமிழகம் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என சொல்லி இருக்கிறீர்கள். இதையெல்லாம் நம்பித்தானே மக்கள் உங்களுக்கு ஆட்சியை தந்தார்கள். இதை ஏன் மறந்துவிட்டீர்கள்.
மக்களை பாதிக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம், திருமண உதவித்திட்டம் ஆகிய அற்புத திட்டங்களை கொண்டு வந்தார். இதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பயனடைந்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 4 கிராம் தங்கத்தை 8 கிராமமாக உயர்த்துவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
கல்வி புரட்சி
அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சியிலும், ஜெயலலிதாவின் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம். லட்சக்கணக்கான குடும்பங்களில் விளக்கேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. 2011-ல் தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கு 34 ஆக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்ட காரணத்தினால் அது 52 ஆக உயர்ந்தது.
இந்தியாவிலேயே அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலங்களில் தமிழகம் நம்பர் 1 இடத்தை அ.தி.மு.க. அரசு இருந்தபோது பெற்றது. இன்றைக்கு கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒரு டன் கம்பியின் விலை ரூ.35 ஆயிரமாக இருந்தது. இப்போது அது ரூ.90 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
வீடு கட்டும் கனவு கானல் நீரானது
அதேபோன்று ரூ.290 ஆக இருந்த சிமெண்டு மூட்டையின் விலை ரூ.475, ரூ.500 என உயர்ந்துள்ளது. இந்த கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டியதுதானே. ஆனால் அதனை செய்ய மாட்டார்கள். காரணம் ஒரு சிமெண்டு மூட்டைக்கு 30 ரூபாய் தி.மு.க.வுக்கு போகிறது. ரூ.190-க்கு கொடுத்த அம்மா சிமெண்டை நிறுத்தி விட்டார்கள். இதனால் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு கானல் நீராகிவிட்டது.
தன்னுடைய கஜானாவை நிரப்புவதற்கு எதில் வருமானம் வருகிறது. எதில் ஊழல் செய்ய முடியும். எப்படி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதில்தான் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு, இந்த ஆட்சியில் முதல்வர் ரிப்பன் வெட்டிக்கொண்டு இருக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை பாதுகாத்தோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மு.க.ஸ்டாலின் துணை போனார். அதனை தடுத்து நிறுத்தினோம். அ.தி.மு.க. ஆட்சியில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரதமரும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சொன்னார். நீங்கள் டெல்லி சென்றபோது இந்த திட்டத்தை பற்றி கேட்டீர்களா?.
தமிழகத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், தாலிக்குதங்கம் திருமண உதவித்திட்டம், பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் எல்லாம் முடக்கப்பட்டு விட்டன. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் இல்லை. மாறாக எல்லா துறைகளிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்.
துன்பமான ஆட்சி
கூட்டு பாலியல் பலாத்காரங்கள் தமிழகத்தில் கடந்த 2 மாதமாக அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து சிதைந்து போய் இருக்கிறது. முதுகுளத்தூரில் பட்டியல் இனத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை அமைச்சரே சாதி பெயரை சொல்லி திட்டி இருக்கிறார். இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா?. தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது. கஞ்சா விற்காத இடமே தமிழகத்தில் இல்லை. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மின்வெட்டு இப்போது ஆரம்பித்து உள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார் ஸ்டாலின். ஆனால், இந்த ஆட்சி இருப்பதையே மக்கள் துன்பமாகத்தான் பார்க்கிறார்கள். கோடைவெயில் ஆரம்பித்து விட்டது. இனி மின்வெட்டுதான் இந்த ஆட்சியில் அரங்கேறும். அ.தி.மு.க. ஆட்சியில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது.
ஓட்டுப்போட்ட மக்களுக்கு வேட்டு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். ஏனென்றால், பிரதமரே கூறி உள்ளார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு தி.மு.க.வும் தயாராக இருப்பதாக கூறி உள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்று விட்டது. அந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பரிசுதான், சொத்து வரி உயர்வு. ஓட்டுப்போட்ட மக்களுக்கு வேட்டு வைத்து விட்டார்கள். இனிமேல் பம்பர் பரிசாக மின் கட்டணம், பஸ் கட்டணம் போன்றவற்றையும் உயர்த்தி விடுவார்கள். கடந்த 10 மாத ஆட்சியில் தி.மு.க. அரசு எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி, மாநில இணை செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், பொன்.செல்வராஜ் மற்றும் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
------

Related Tags :
Next Story