தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திடீர் மழை


தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திடீர் மழை
x
தினத்தந்தி 5 April 2022 7:07 PM IST (Updated: 5 April 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திடீர் மழை பெய்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பகல்நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே சாலையோரங்களில் குளிர்பான கடைகள், நுங்கு, பதநீர் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து உள்ளது. நேற்று அதிகாலையில் ஆத்தூர், பழையகாயல், முத்தையாபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் சுமார் 15 நிமிடங்கள் சாரல் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 10 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 5 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் ஒரு மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது. இதனால் ஆங்காங்கே லேசாக மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story