குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம்


குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம்
x
தினத்தந்தி 5 April 2022 7:48 PM IST (Updated: 5 April 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம்

கோத்தகிரி

கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, முள்ளம்பன்றி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் தொடர்ந்து உலா வருகின்றன. 

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் தேயிலைப் பறிக்க செல்லும் தொழிலாளர்களும், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டெருமைகள் தாக்கி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு  வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

1 More update

Next Story