ரெயிலில் கஞ்சாவுடன் வந்த ஜார்கண்ட் வாலிபர்கள் 2 பேர் கைது
ரெயிலில் கஞ்சாவுடன் வந்த ஜார்கண்ட் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் நேற்று மதியம் ஒரு மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த ஒரு பையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த பையை கொண்டு வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரஓரான் (வயது 23), சந்தீப்குமார் லோகரா (24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் நாகர்கோவிலுக்கு வேலைக்கு செல்வதற்கு ரெயிலில் ஏறிய அவர்கள், கஞ்சா வாங்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story