நூதன முறையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்

தக்கலை அரசு மருத்துவமனையில் நூதன முறையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நூதன முறையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்
Published on

தக்கலை:

தக்கலை அரசு மருத்துவமனையில் நூதன முறையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மூதாட்டி

தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஞானையன். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 80). கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லம்மாள் வீட்டில் தவறி விழுந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக பஸ் ஏறி தக்கலை அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதனை கவனித்த 45 வயது மதிக்கத்தக்க மர்மஆசாமி, செல்லம்மாளின் அருகில் சென்று உதவி செய்வது போல் பேச்சு கொடுத்தார்.

முதலில் உங்களுக்கு அடிபட்ட காலில் ஸ்கேன் எடுத்து பார்க்கனும். அதற்கு, நான் உங்களை அழைத்து செல்கிறேன் என மர்மஆசாமி தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மூதாட்டியும், மர்மஆசாமியுடன் மருத்துவமனைக்குள் சென்றார்.

நகை பறிப்பு

அங்கு டாக்டரை பார்த்த பிறகு, இனி ஸ்கேன் எடுக்க வேண்டும் என மர்மஆசாமி அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் மையத்திற்குள் செல்லும் போது நகை அணிந்திருக்கக்கூடாது என கூறியதோடு, நகையை கழற்றி என்னிடம் தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மூதாட்டியும், கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி மர்மஆசாமியிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மர்மஆசாமி அங்கிருந்து நைசாக தப்பி விட்டார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய மகனிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நூதன நகை பறிப்பு குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடிவருகின்றனர்.

---

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com