வேடியப்பர் கோவிலில் தீ விபத்து; மூங்கில் மரங்கள் எரிந்து சேதம்
சங்கராபுரம் வேடியப்பர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூங்கில் மரங்கள் எரிந்து சேதமானது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் வேடியப்பர்கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மூங்கில்மரங்கள் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகளுக்கு எந்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story