1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள தாழ்தேவனூர் ஓடையில் கரியாலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com