தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்தி வருமாறு:-
போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகரம் பஸ் நிலைய சுவற்றில் அரசியல், சினிமா, திருமணம் விளம்பரம் போன்றவற்றின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுஉள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்திற்குள் போஸ்டர்கள் ஒட்டுவதை தடு்க்க வேண்டும். இதை மீறி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கல்லார் ரபீக்
Related Tags :
Next Story