வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கேஜி.ரமேஷ் ஆகியோர் தலைமையில் நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.சி. சங்கர், எஸ்.எம்.எஸ். சதீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் கட்டப்பட்ட குடிசை வீடு மற்றும் கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்று கூறி நகராட்சி ஆணையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆணையாளர் அந்தப் பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யும்போது நகராட்சிக்கு சொந்தமான இடம் என தெரியவந்து பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் எந்தவித பதிலும் வரவில்லை. அதனால் வரியை ரத்து செய்து, மின்சார இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார். பின்னர் மாலையில் குடிசை வீடு முழுவதும் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story