இலை சுருட்டு நோயால் மரவள்ளி பயிர் பாதிப்பு


இலை சுருட்டு நோயால் மரவள்ளி பயிர் பாதிப்பு
x
தினத்தந்தி 5 April 2022 11:04 PM IST (Updated: 5 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இலை சுருட்டு நோயால் மரவள்ளி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள  மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி, புதுபட்டு, புதூர், ராவத்தநல்லூர், ஆனைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் பெரும் செலவு செய்து மரவள்ளி கிழங்கு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். 
இந்த நிலையில் இலை சுருட்டல் நோயால் தற்போது பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக செலவு செய்து மரவள்ளி பயிரிட்டு பராமரித்து வருகிறோம். இந்த நிலையில் இலை சுருட்டு நோயால் எங்களது பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளை தெனித்தோம். 

ஆலோசனை

இருப்பினும் கட்டுப்படுத்த முடியவில்லை. நோய் தாக்குதலால் பயிர்கள் வளர்ச்சி குறைந்துள்ளதால் இந்தாண்டு எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட எங்களது பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர். 

Next Story