பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 11:04 PM IST (Updated: 5 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ. வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் வி்லை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை சாய்த்து அதற்கு மாலை அணிவித்து பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தரிவித்தனர். இதில், கட்சியின் பொறுப்பாளர்கள் நவாஸ், வடவீரபாண்டியன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.




Next Story