தடுப்பு சுவரில் கார் மோதல் உயிர்தப்பிய தம்பதி
தடுப்பு சுவரில் கார் மோதியது.
விராலிமலை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த ராஜூ மற்றும் அவரது மனைவி முத்துமாரியுடன் காரில் விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மலைப்பாதையில் இறங்கியுள்ளனர். அப்போது கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி முன் பகுதி சேதமடைந்தது. இதில் காரில் இருந்த ராஜு மற்றும் முத்துமாரி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story