அதிகாரிகளே சுங்க கட்டணத்தை வசூலித்தனர்


அதிகாரிகளே சுங்க கட்டணத்தை வசூலித்தனர்
x
தினத்தந்தி 5 April 2022 11:29 PM IST (Updated: 5 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

பொய்கை வாரச்சந்தையில் அதிகாரிகளே சுங்க கட்டணத்தை வசூலித்தனர்

அணைக்கட்டு

அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்க ஆண்டிற்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் ஏலம் நடத்தப்படவில்லை. 

இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டிற்கான ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. 

அப்போது அரசு நிர்ணயித்த ெதாகைக்கு ஏலம் போகாததால் சுங்க கட்டணத்தை அதிகாரிகளே வசூலிக்க முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை விற்பனைக்கு வந்த பசுமாடு, காளை மாடு, ஆடு, கோழி கொண்டு வந்த உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் சுங்க கட்டணத்தை அதிகாரிகள் வசூலித்தனர்.

Next Story