சிங்காரப்பேட்டை அருகே மூதாட்டியை தாக்கிய மகன் கைது

x
தினத்தந்தி 5 April 2022 11:42 PM IST
சிங்காரப்பேட்டை அருகே சொத்து தராத மூதாட்டியை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 65). இவரது மகன் செந்தில்குமார் (40). கடந்த 3-ந் தேதி இந்திராணி பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி தருமாறு மகன் செந்தில்குமார் மற்றும் மருமகள் ராணி (37) ஆகியோர் கேட்டனர். இதற்கு இந்திராணி மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கினார்கள். இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





