மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
தொண்டி
திருவாடானை யூனியனில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 47 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் பால் மாடு வளர்த்து வரும் பெண்களை உறுப்பினர்களாக தேர்வு செய்து வட்டார அளவிலான பால் உற்பத்தியாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு மாடு வளர்ப்பு, கன்று வளர்ப்பு, தீவனம் உற்பத்தி முறைகள், மாடு வளர்ப்பின் மூலம் குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டுவது தொடர்பான 3 நாள் பயிற்சி நடைபெற்றது. யூனியன் கவுன்சில் கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்பயிற்சியை மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் விஜயலிங்கம், உதவி பேராசிரியர் ராஜேஷ், செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, பரமசிவம், மார்ட்டின் விண்ணரசு ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பின்னர் பட்டறிவு பயணமாக காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தரமான பால் கண்டுபிடித்தல், தரம்பிரித்தல், சத்துக்கள் கண்டறிதல், பால் குளிரூட்டும் முறை, பால், நெய், வெண்ணெய், தயிர், பால் மதிப்பு கூட்டுதல் போன்ற கருத்துக்கள் விளக்கி கூறப்பட்டது. இப் பயிற்சியில் கலந்து கொண்ட திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ்களை வட்டார அணித்தலைவர் செல்வமணி, வட்டார திட்ட செயலாக்குனர் சித்திரவேலு ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story